புதிய தாழமுக்கம் வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு இடையே கரையை கடக்கும்! சனிக்கிழமைவரை கனமழை, சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

ஆசிரியர் - Editor I
புதிய தாழமுக்கம் வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு இடையே கரையை கடக்கும்! சனிக்கிழமைவரை கனமழை, சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை வரை வடகிழக்கு மாகாணங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, தற்போதைய நிலைமையின்படி இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடைப்பட்ட பகுதியூடாகவே நிலப்பகுதிக்கு நகர்ந்து புத்தளம் மற்றும் மன்னாருக்கு இடைப்பட்ட பகுதியூடாக அரபிக் கடலுக்கு வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

(மிகச்சரியான நகர்வுப்பாதை பின்னர் அறியத்தரப்படும்) இதனால் எதிர்வரும் 27.11.2021 சனிக்கிழமை வரை தொடர்ச்சியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது. 

தொடர்ச்சியாக கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது என்பதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும். மீனவர்கள் எதிர்வரும் 27.11.2021 வரை கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

எனவும் அவர் எச்சரித்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு