10 ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்ட நீதிமன்ற பதவிவாளர் கையும் களவுமாக சிக்கினார்..!
லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் நீதிமன்ற பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் தெல்தெனிய மாவட்ட நீதிமன்ற பதிவாளரே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவரின் முறைப்பாட்டிற்கு அமைய தெல்தெனிய பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் அருகில்
இலஞ்சம் பெற முற்பட்ட சந்தர்ப்பத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் குறித்த கடற்படை அதிகாரியிடம் 10,000 ரூபா இலஞ்சம் பெற முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.