யாழ்.பல்கலைக தமிழ்துறை நடாத்தும் 2வது அனைத்துலக தமிழியல் மாநாடு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக தமிழ்துறை நடாத்தும் 2வது அனைத்துலக தமிழியல் மாநாடு..!

யாழ்.பல்கலைகழக தமிழ்துறை ஒழுங்கமைப்பில் 2வது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடு இன்று காலை யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகியுள்ளது. 

தமிழத் துறையின் தலைவர் பேராசிரியர் இரகுநாதன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு மாநாட்டில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா முதன்மை விருந்தினராகவும், 

கலைப்பீடாதிபதி பேராசிரியர் சுதாகர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவரும், வாழ்நாள் பேராசிரியருமான, 

பேராசிரியர் சண்முகதாஸ் மாநாட்டின் சிறப்புரையை வழங்கி மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.மாநாட்டின் போது, ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கும், 

மொழிக்கும் தொண்டாற்றிய ஏழு புலமையாளர்களுக்குக் கௌரவம் வழங்கப்பட்டது.பண்டிதர் கதிரிப்பிள்ளை உமாமகேஸ்வரம்பிள்ளை, பண்டிதர் க. ஈஸ்வரநாதபிள்ளை, 

பண்டிதை வைகுந்தம் கணேசபிள்ளை, பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை, பண்டிதர் ம.ந. கடம்பேஸ்வரன், பண்டிதர் வீ. பரந்தாமன், பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு ஆகிய ஏழு புலமையாளர்களே கௌரவிக்கப்பட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு