யாழ்.காரைநகர் பிரதேசசபையின் ஆட்சியை இழந்த கூட்டமைப்பு! சுயேட்சை குழு உறுப்பினர் மயிலன் அப்புத்துரை தவிசாளரானார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகர் பிரதேசசபையின் ஆட்சியை இழந்த கூட்டமைப்பு! சுயேட்சை குழு உறுப்பினர் மயிலன் அப்புத்துரை தவிசாளரானார்..

யாழ்.காரைநகர் பிரதேசசபையின் தவிசாளராக சுயேட்சைகுழு உறுப்பினரான மயிலன் அப்புத்துரை தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். 

காரைநகர் பிரதேசசபையின் தவிசாளர் அண்மையில் உயிரிழந்திருந்த நிலையில் புதிய தவிசாளர் தெரிவு இன்று நடைபெற்றது.

இந்நிலையில் 03 உறுப்பினர்களைக் கொண்ட சுயேட்சைக்குழு உறுப்பினரான மயிலன் அப்புத்துரை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த 03 பேர், 

சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் 03 பேர், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் 03 பேர், ஐக்கிய தேசியக்கட்சியினர் 02 பேர், 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து ஒருவர் என அங்கம் பெறுகின்றனர். இன்றைய தவிசாளர் தெரிவின்போது, 

ஐக்கிய தேசியக் கட்சி (02) வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (01) நடுநிலைமை வகித்தது,

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (02) சுயேட்சைக்குழு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் சுயேட்சைக்குழு உறுப்பினர் 

மயிலன் அப்புத்துரை வெற்றிபெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு