9ம் திகதியே சூரன் போர் நடத்தப்படவேண்டும், தமிழர் சைவப்பேரவை குழப்பத்தை தெளிவுபடுத்தியது..!
கந்தசஷ்டி விரதம் தொடர்பான தெளிவூட்டலை தமிழர் சைவ பேரவை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளதாவது,
மகா சிவராத்திரி, பிரதோஷம், சதுர்த்தி, ஏகாதஷி, நவராத்திரி, புரடாசி சனி, கேதார கௌர விரதம், கந்த சஷ்டி, திருவெம்பாவை, பிள்ளையார் கதை என்பன
சைவ மக்கள் கடைப்பிடிக்கும் முக்கிய விரதங்கள் ஆகும் இந்த விரதங்களில் கந்தசஷ்டி விரதத்தை வீடுகள் மற்றும் ஆலயங்களில்
உபவாசம் இருந்து பக்தி சிரத்தையுடன் 6 தினங்கள் அனுஷ்டிப்பர் சஷ்டி என்பது 6 என்பதை குறிப்பதாகும். இந்த விரதம் ஐப்பசி வளர்பிறை பிரததை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்கள் அனுட்டிக்கப்படுகின்றது.
இம்முறை சஷ்டி திதியானது எதிர்வரும் 10ம் திகதி பிற்பகல் 2.29 மணிக்க முடிவடைகிறது. கந்தபுராணத்தை அடிப்படையாக கொண்ட சஷ்டி திதியிலேயே சூரன்போர் நடைபெற்று சூர சம்காரம் நிகழ்த்தப்படவேண்டும்.
சூரன்போரானது ஆகம பூசை விதிகளுக்கு அமைவாக மாலை 4 மணி தொடக்கம் 6 மணிவரையே ஆற்றப்படுதல் வேண்டும். எனவே எதிர்வரும் 9ம் திகதி செவ்வாய் கிழமை மாலை சூரன் போர் நடைபெற்று
மறுநாள் இரவு கந்த சஷ்டி விரதத்தை முடிவுக்கு கொண்டுவரலாம் என்றுள்ளது.