வடக்கில் பூஸ்டர் தடுப்பூசி பணிகள் இன்று ஆரம்பம்..! மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..
வடமகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 3வது டோஸ் (பூஸ்டர்) தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று தொடங்கப்படுவதாக வடமாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
மூன்றாவது அலகாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ள போதனா மருத்துவனை, மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆதார மருத்துவமனைகளில்
இந்த தடுப்பூசி வழங்கும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், துணை மருத்துவ சேவையாளர்கள்,
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்பட சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு முதல் கட்டமாக மூன்றாது அலகு கோவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கப்படவுள்ளது.
அடுத்த கட்டமாக ஏனைய துறையினருக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்படவுள்ளன.