SuperTopAds

மின் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்! அரசு எடுத்துள்ள முடிவு..

ஆசிரியர் - Editor I
மின் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்! அரசு எடுத்துள்ள முடிவு..

பல மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாமல் உள்ள வாடிக்கையாளர்களின் மின் இணைப்புகளை துண்டிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இவ்வாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது.

கொரோனாத் தொற்று நோயால் ஏற்படும் வருவாய் இழப்பைக் கருத்தில்கொண்டு மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு சில நிவாரணங்களை வழங்க 

அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், மாதாந்தக் கட்டணத்தைச் செலுத்தக்கூடியவர்கள் கூட அதைத் தொடர்ந்து செலுத்தவில்லை.

கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மின்கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது.

தொடர்ந்து மின்கட்டணம் செலுத்தாதவர்கள், செலுத்தத் தயக்கம் காட்டினால் தற்காலிகமாக மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.

எப்படியிருப்பினும் மின்சாரத்தை துண்டிப்பதற்கு முன்னர் சிவப்புப் பட்டியல் வழங்கப்படும் என்றார்.