SuperTopAds

தனிப்பட்ட குடும்ப தகராறு அடித்தே கொல்லப்பட்ட வயோதிப பெண்! கணவன் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
தனிப்பட்ட குடும்ப தகராறு அடித்தே கொல்லப்பட்ட வயோதிப பெண்! கணவன் படுகாயம்..

தனிப்பட்ட தகராறு அடிதடியில் முடிந்த நிலையில் பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதுடன், பெண்ணின் கணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் ஹொரணை - அங்குருவாதொட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். தனிப்பட்ட குடும்ப தகராறு காரணமாக தமது மருமகனால் இருவரும் தாக்கப்பட்டுள்ளதுடன், 

இதில் 58 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை அங்குருவாதொட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் 36 வயதுடைய கபுஹேன, 

கல்பாத பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.கொலைக்குப் பயன்படுத்தியதாக கருதப்படும் ஆயுதம் மற்றும் சந்தேகநபர் வந்த உந்துருளி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேகநபரை இன்று ஹொரணை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.