நிர்வாணமாக வீதியில் நின்று தான் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் சீடன் என கத்தியவருக்கு நடந்த சம்பவம்..!
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயரையும் தாங்கள் அவரின் சீடர்கள் என்றும் வீதியில் நிர்வாணமாக நின்று கத்தி கூச்சலிட்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆபாசமாக பேசியும் நடந்து கொண்டதாக பிரதேசவாசிகள் புத்தளம் பொலிஸாருக்கு 119 இலக்கத்தின் கீழ் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பல நாட்களாக இவ்வாறு நடந்து கொள்வதாகவும், ஆடையின்றி வீதியில் நடந்து செல்வதாகவும் அருகில் உள்ள முன்பள்ளியின் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.