யாழ்.மாவட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை..!

ஆசிரியர் - Editor I

வங்காள விரிகுடாவின் தென் பகுதியில் உருவாகியிருக்கும் தாழமுக்கம் காரணமாக யாழ்.மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என கூறியிருக்கும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், 

இது குறித்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் என்.சூரியராஜ் கூறியுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் 20.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதிகூடிய மழைவீழ்ச்சியாக நயினாதீவில் 80.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி

அச்சுவேலியில்26.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது, வங்காள விரிகுடாவின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதோடு 

மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.எனவே பொதுமக்கள் தங்களையும் தங்களது உடைமைகளையும் குறித்த காலப்பகுதியில் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

குறிப்பாக கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 தொடக்கம் 65 கிலோமீற்றர் வரை வீசும் என எதிர்பார்க்கப்படுவதால்,குறித்த காலப்பகுதியில் கடலானது கொந்தளிப்பாக காணப்படும்.

குறிப்பாக கரையோரப் பகுதி மக்கள் மற்றும் கடற்றொழிலுக்கு செல்வோர் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு