கையெறி குண்டின் முள்ளைப் புடுங்கியபின் கையில் வைத்திருந்தால் வெடிக்காதாம்? புதுசா இருக்கே!
கையெறி குண்டின் முள்ளை புடுங்கிவிட்டு போஸ் கொடுத்த இளைஞர் உயிரிழந்த துயர சம்பவம் ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது. தென்மேற்கு ரஷ்யாவின் லபின்ஸ்க் நகரைச் சேர்ந்த அலெக்சாண்டர் சேஷிக் எனும் இளைஞரே உயிரிழந்தவர்.
26 வயதான சாஷா, தனது காரில் இருந்தவாறு கையெறி குண்டின் முள்ளை புடுங்கிவிட்டு அதை கையில் வைத்தவாறு போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர் ஒருவர், எங்கிருக்கிறார்? சரியாக தானே இருக்கிறாய்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள இளைஞர், சரி என்பது நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தது என்று பதிலளித்துள்ளார்.
இந்நிலையில், கையிலிருந்த கையெறி குண்டு திடீரென வெடித்ததில் அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள ரஷ்ய பொலிசார், சாஷாவிற்கு கையெறி குண்டு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்த விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
முள்ளை புடுங்கிய பின் தூக்கி எறிந்தால் மட்டுமே கையெறி குண்டு வெடிக்கும் என்று சாஷா தவறாக கருதியிருந்ததாகவும், கையில் இருக்கும்போதே அது வெடிக்கக் கூடும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.