SuperTopAds

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து குறித்து புதிய அறிவிப்பு வெளியானது..!

ஆசிரியர் - Editor I
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து குறித்து புதிய அறிவிப்பு வெளியானது..!

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தை எதிர்வரும் திங்கள் கிழமை தளர்த்தப்பட்ட பின் உரிய நேர அட்டவணையின் பிரகாரம் சகல பேருந்து செவைகளும் முன்னெடுக்கப்படும். 

மேற்கண்டவாறு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த தனியார் பஸ் சேவைகளை மீள ஆரம்பிப்பதற்காக, பஸ் உரிமையாளர்களுக்கு வழங்கக்கூடிய, 

அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்துடன், போக்குவரத்து அமைச்சில் நேற்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலில், 

போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.