SuperTopAds

கொடும்பாவி எரித்தாலும், சுட்டுக் கொன்றாலும் பண முதலைகள் எம் கடல் வளத்தை அழிக்கவிடோம்..!

ஆசிரியர் - Editor I
கொடும்பாவி எரித்தாலும், சுட்டுக் கொன்றாலும் பண முதலைகள் எம் கடல் வளத்தை அழிக்கவிடோம்..!

கடலை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் சில பண முதலைகள் கடல் வழத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். என வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, வடக்கில் றோலர் தொழில் செய்யும் பலர் அரச உத்தியோகத்தர்களாகவும் 

வேறு தொழில் முயற்சியில் ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர். தொடர்சியாக கடல் தொழிலில் ஈடுபடும் ஒரு சிலரே றோலர் வைத்துள்ளார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தை போலவே கடலையும் நேசிப்பவர்கள். 

ஆனால் கடலை கொள்ளையடிக்க முதலீடு செய்தவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள். அவர்களை கண்டு நாங்கள் பயப்படபோவதும் இல்லை. ஒரு சிலர் வாழ்வதற்காக எங்கள் மண் வளத்தையும் கடல் வளத்தையும் அழிப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 

உருவப்பொம்மை என்ன எங்களை சுட்டுப்போட்டாலும் எங்கள் வளங்களை அழிப்பவர்களிற்கு எதிராக போராடுவோம். குடத்தனையில் மணல் கொள்ளைக்கு எதிராக போராடிய நண்பன் கேதீஸை சுட்டுக் கொன்றதனை மறக்கவும் இல்லை.

அதற்கு பயந்து மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தாமல் பயந்து ஒதுங்கவும் இல்லை. ஆகவே எங்கள் போராட்டம் தொடரும் என்றுள்ளது.