பொது இடத்தில் சட்டத்தரணி ஒருவரின் மகனை தாக்கிய பொலிஸாருக்கு சிக்கல்..!
பொது இடத்தில் சட்டத்தரணி ஒருவரின் மகன் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடாத்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் சிக்கலில் மாட்டியுள்ளார்.
பொலிஸ் அதிகாரி தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி விமர்சனங்களை உருவாக்கியிருக்கின்றது.
இரத்தினபுரி கிரியல்ல வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கே இவ்வாறு சட்டத்தரணியின் மகனை தாக்கியுள்ளார்.
சீருடையில் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.சம்பவம் ஒன்று தொடர்பில்
பொலிஸார் தன்னை கைதுசெய்ய முயன்றதாகவும் தான் மறுத்தவேளை பொலிஸார் தன்னை தாக்கியதாகவும் சட்டத்தரணியின் மகன் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.