இலங்கையில் முதல் தடவையாக ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகள், பிரதமரின் பாரியார் நோில் பார்வையிட்டார்..!
இலங்கையில் முதல் தடவையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற தாயை பிரதமரின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஸ தனியார் வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டு நலன் விசாரித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி அதிகாலை ஒரே பிரசவத்தில் இந்த ஆறு குழந்தைகளும் பிறந்துள்ளதுடன், அவர்களில் மூவர் ஆண் குழந்தைகள், மூவர் பெண் குழந்தைகள் ஆவர்.
திலினி வாசனா மற்றும் பிரபாத் உதயங்க மரவனாகொட தம்பதியினருக்கு பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரிப்பதற்காக சென்ற பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ,
தனியார் மருத்துவமனையின் சிரேஷ்ட செயல்பாட்டு முகாமையாளர் சுசந்த பீரிஸ் உள்ளிட்ட ஊழியர்களினால் வரவேற்கப்பட்டார். அதனை தொடர்ந்து பிரதமரின் பாரியார் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரித்ததுடன்,
குழந்தைகளின் பெற்றோருடன் நட்பு ரீதியாக கலந்துரையாடினார். குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு பரிசுப் பொருட்களை வழங்கிய பிரதமரின் பாரியார், எதிர்காலத்தில் அவர்களின் தேவைகளை நிறைவேற்ற தயார் எனவும் குறிப்பிட்டார்.