திருமண நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடு மேலும் தளர்வு, இரவு நேர பயண தடை இன்று நள்ளிரவு முதல் தளர்த்தப்படுகிறது. புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது..
நாட்டில் கொவிட் -19 பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளை பகுதியளவில் தளர்த்தி புதிய சுகாதார வழிகாட்டல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகள்.
திருமண நிகழ்வுகளுக்கு வீதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது. இதன்படி உட்புற திருமண நிகழ்வுகளில் 100 விருந்தினர்களையும் வெளிப்புற திருமண நிகழ்வுகளில் 150 விருந்தினர்களையும் அனுமதிக்க முடியும் எனினும் மதுபான விருந்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள்.
உணவகங்களில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 75 பேர் மட்டும் உணவருந்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வெளிப்புற இருக்கைகள் கொண்ட உணவகங்களில் அதிகபட்சமாக 100 பேர் உணவருந்த முடியும்.
அதேபோல் மாநாட்டு மண்டபங்களில் மூன்றில் ஒரு பகுதி இடத்தில் அலுவலக கலந்துரையாடல்கள் மற்றும் மாநாடுகளை நடாத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிலும் 150 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
இரவு நேர பயணத்தடை.
மேலும் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை நடைமுறையில் இருந்த இரவு நேர பயண தடை இன்று நள்ளிரவு முதல் தளர்த்தப்படுகிறது.