மத வழிபாட்டு தலங்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..! ஓரளவு தளர்த்தப்பட்ட கட்டுப்பாடு..
சகல மத வழிபாட்டு தலங்களிலும் 50 பேருடன் வழிபாடு நடாத்தவும், சமய அனுட்டானங்களை செய்யவும் சுகாதார அமைச்சு அனுமதியளித்துள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் தொிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதன்படி கோவில்கள், விகாரைகள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் 50 பேரை உள்ளடக்கி மத வழிபாடுகளை
முன்னெடுக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.