SuperTopAds

அரிசி மற்றும் பருப்பு விலைகளை பார்த்துக் கொள்வதற்காகவா என்னை நியமித்தீர்கள்..? ஜனாதிபதி கேள்வி..

ஆசிரியர் - Editor I
அரிசி மற்றும் பருப்பு விலைகளை பார்த்துக் கொள்வதற்காகவா என்னை நியமித்தீர்கள்..? ஜனாதிபதி கேள்வி..

அரிசி மற்றும் பருப்பு விலைகளை பார்த்துக் கொள்வதற்காகவா? என்னை நியமித்தீர்கள் என கேள்வி எழுப்பியிருக்கும் ஜனாதிபதி அந்த வேலைக்கு நான் தேவையில்லை. எனவும் கூறியுள்ளார். 

100 சதவீதம் கரிம உரத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய பண்ணை ஒன்றை பார்வையிட இன்று (23) சென்றபோது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், எங்களது முந்தைய அரசாங்கங்கள் கூட இதைச் செய்ய முயற்சித்தன. இது கடினமான பணி. எனது முன்னோர்களுக்கு தெரியும். 

பாரம்பரிய பயிற்செய்கையை எப்படி செய்வது என்று. ஆனால் துரதிஷ்டவசமாக எந்த தலைவரும் இந்த முடிவை எடுக்கவில்லை.என்னை நியமித்தது பருப்பு மற்றும் அரிசியின் விலையைப் 

பார்த்துக் கொள்வதற்காக என்றால் அதற்கு நான் தேவையில்லை. அதை விட மாற்றம் ஒன்றை கொண்டு வருவதற்காகவே. விசேடமாக இந்த விவசாயத் துறை தொடர்பில். 

நான் வந்தது முதல் உரத்தை இலவசமாக வழங்கினேன். உண்மையில் விவசாயியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவே இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல், நெல்லின் உத்தரவாத விலையை அதிகரித்தோம் என்றார்.