SuperTopAds

இலங்கையில் எலிக்காய்ச்சல் அபாயம் தீவிரம்..! இருவர் உயிரிழந்துள்ளனர்..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் எலிக்காய்ச்சல் அபாயம் தீவிரம்..! இருவர் உயிரிழந்துள்ளனர்..

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அபாயம் நீடித்துவரும் நிலையில் மறுபக்கம் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் அபாயமும் தீவிரமடைந்து வருகின்றது. 

கடந்த ஜுன் மாதம் முதல் கடந்த 20ஆம் திகதிவரையான 04 மாதங்களிற்குள் இலங்கையில் எலிக்காய்ச்சல் காரணமாக 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் இருவர் உயிரிழந்திருக்கின்றனர்.

குறித்த 250 நோயாளர்களும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் மாவனெல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.