நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்திருக்கும் எச்சரிக்கை..! டெல்டா பிளஸ் பரவும் அபாயம்..
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோரினால் டெல்டா பிளஸ் கொவிட்-19 வைரஸ் பரவும் அபாயம் எழுந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நாட்டில் டெல்டா பிளஸ் திரிபடையுமாயின் பொதுமக்களின் செயற்பாடு
அதற்கு காரணியாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார். எனவே பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுவது அவசிம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் டெல்டா பிளஸ் திரிபு குறித்து நாட்டில் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளப்படும் மாதிரிகள் ஊடாக பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.