SuperTopAds

வடக்கை தொடர்ந்து கிழக்கு ஆளுநரும் மாற்றம்..! மேலும் பல உயர் அதிகாரிகளுக்கு வருகிறதாம் இடமாற்றம், மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor I
வடக்கை தொடர்ந்து கிழக்கு ஆளுநரும் மாற்றம்..! மேலும் பல உயர் அதிகாரிகளுக்கு வருகிறதாம் இடமாற்றம், மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஜனாதிபதி..

வடமாகாண ஆளுநர் மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநர் அனராதா யஹம்பத் பதவி நீக்கப்பட்டுள்ளதுடன் புதிய ஒருவர் கிழக்கு ஆளுநராக நியமனம் செய்யப்படவிருக்கின்றார். 

இதேவேளை நாட்டின் அரச நிர்வாகத்தில் உயர் பதவிகளில் உள்ளவர்கள் பலர் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அந்த தீர்மானத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ எடுத்துள்ளதாகவும் கொழும்பு ஊடகங்கள் தொிவித்துள்ளன. 

இந்நிலையில் வடக்கு ஆளுநர் பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய ஒருவர் நியமிக்கப்பட்ட நிலையில் கிழக்கு ஆளுநர் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார். 

மேலும் சுங்க திணைக்களம் உள்ளிட்ட சில திணைக்களங்கள் மற்றும் சில அமைச்சுக்களின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடமாற்ற கடிதங்கள் பறக்கவுள்ளதாக தொியவருகின்றது. 

மக்களுக்கான சேவை வழங்கலில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியிருக்கும் ஜனாதிபதி அதனை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையிலான மறுசீரமைப்பு நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.