SuperTopAds

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் இலங்கை சபிக்கப்பட்டுள்ளது..! அழிவுகளை காட்டி ஆட்சியை பிடித்தவர்கள் நீண்டநாள் ஆட்சியில் இருக்கமாட்டார்கள்!

ஆசிரியர் - Editor I
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் இலங்கை சபிக்கப்பட்டுள்ளது..! அழிவுகளை காட்டி ஆட்சியை பிடித்தவர்கள் நீண்டநாள் ஆட்சியில் இருக்கமாட்டார்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும், அதனால் ஏற்பட்டிருந்த மிகப்பெரும் அழிவுகளையும் ஆட்சியை பிடிப்பதற்காக பயன்படுத்தியவர்கள் நீண்டகாலம் ஆட்சியில் இருக்கவே முடியாது. என பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சாடியுள்ளார். 

உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 30 மாதங்களாவதை குறிக்கும் விதத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அது சாபக்கேடாக மாறியுள்ளது,

எவரும் மகிழ்ச்சியாக வாழமுடியாத நிலை காணப்படுகின்றது பலர் வாழ்வதற்காக உழைக்க முடியாத நிலை காணப்படுகின்றதுஎன அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற காலம் முதல் இலங்கை சபிக்கப்பட்டுள்ளது போல தோன்றுகின்றது.

எவரும் மகிழ்ச்சியாக வாழமுடியாத நிலை காணப்படுகின்றது பலர் வாழ்வதற்காக உழைக்க முடியாத நிலை காணப்படுகின்றது. அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆட்சி புரியமுடியாத நிலையில் உள்ளனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித்தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்களால் நீண்டநாள் அதிகாரத்தில் இருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.விசாரணைகள் இடம்பெறும் விதத்தினை பார்க்கும்போது தற்போதைய ஆட்சியாளர்களிற்கும் 

இந்த தாக்குதலில் தொடர்புள்ளதோ என நாங்கள் சிலவேளைகளில் யோசிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.உயிர்த்தஞாயிறு பேரழிவிற்கு பின்னால் உள்ள உண்மைகளை கண்டுபிடிப்பதற்கு நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். 

தற்போது அந்த துன்பியல் நிகழ்வினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குவதற்கு ஆண்டவனின் அருளை கோருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.