இலங்கையில் முதல் தடவையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்..! தாய், சேய்கள் நலம்..
இலங்கையில் முதல் தடவையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் 31 வயதான தாய் இன்று காலை 3 ஆண் குழுந்தைகளையும், 3 பெண் குழந்தைகளையும் பிரசவித்துள்ளார்.
தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பிறந்த சம்பவம்
இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.