நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..! இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட திரவ உர விநியோகம் நாளை ஆரம்பம்..
இந்தியாவிடமிருந்து கொண்டுவரப்பட்டுள்ள “நனோ நைட்ரஜன்”திரவ யூரியா உரம் நாளை தொடக்கம் விவசாய மத்திய நிலையங்களக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு இலட்சம் லீற்றர் 'நனோ நைட்ரஜன் யூரியா திரவ உரம் நாளை முதல் சகல விவசாய மத்திய நிலையங்களுக்கும் வழங்கப்படவுள்ளன.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் ஏற்கனவே பெரும்போக நெல் செய்கையை ஆரம்பித்துள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளன. 31 லட்சம் லிற்றர் நனோ நைட்ரஜன் யூரியா திரவ உரங்கள்
நாட்டில் ஓடர் செய்யப்பட்டு 100,000 லிற்றர் முதல் தொகுதி சரக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த வாரம் மேலும் 400,000 லிற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி செய்யப்பட உள்ளன.
9 இலட்சம் ஹெக்டர் விவசாய நிலப்பரப்பிற்குத் தேவையான திரவ உரம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இன்று கொண்டுவரப்பட்ட திரவ உரமானது 500 மில்லிமீற்றர் அளவுகொண்டதுடன் 44064 போத்தல்களில் அடங்கியுள்ளன.
இந்திய மாநிலமான குஜராத்தில் IFFCO உலகிலேயே முதன்முறையாக நனோ தொழில்நுட்ப அடிப்படையிலான உரத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் அதை நனோ யூரியா திரவ உரங்கள் என்று அழைக்கின்றனர்.
நானோ யூரியா திரவ உரமானது நைட்ரஜன் மூலமாகும், இது ஒரு தாவரத்தின் சரியான வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும். முன்பு நாம் நைட்ரஜன் என கூறப்பட்ட நைட்ரேட்
மற்றும் அமோனியம் என்ற வகையிலேயே மண்ணில் இருந்து அறுவடை பெறப்பட்டது. தற்போது வேரில் இருப்பதனை செடியில் இலைகள் ஊடாகக் கொடுக்கப்படவுள்ளது. திரவமாக இதனை தெளித்ததும்
இது தண்டின் மூலமாக உள்ளே செல்லும். உணவு உற்பத்தியை மேற்கொள்ள தேவையான முழுமையான நைட்ரஜன் அளவு இதில் கிடைக்கும் என விவசாயப் பணிப்பாளர் நாயகம் அயந்த டி சில்வா தெரிவித்தார்.
நுண்ணுயிர்கள் அடங்கிய விசேட உரமல்ல இதன் போசாக்கு குறித்து நாம் பரிசோதித்துள்ளோம் இந்த உரத்தில் ஒட்டுண்ணிகள் கூறும் வகையில் இருப்பதில்லை அதேபோன்று கனமான வேதியல்கள் இல்லை
இது இந்தியாவில் அனுமதி பெறப்பட்ட முழு உலகம் பூராகவும் விநியோகிக்கப்படும் ஒன்றாகும் என விவசாய அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் உதித்கே ஜெயசிங்க தெரிவித்தார்.
இந்த திரவ உரத்தைப் பயன்படுத்துவது வழக்கமாக யூரியாவின் ஏறத்தாள அதிகப்படியான பயன்பாடு மற்றும் வீணாவதைத் தடுக்கும். இதன் காரணமாக, வழக்கமான யூரியாவுடன் ஒப்பிடுகையில்
இது அதிக பயிர் உற்பத்தி மற்றும் தரத்தை விளைவிக்கிறது என்று குஜராத் IFFCO கூறுகிறது. நைட்ரஜன் யூரியா திரவ உரம் அறிவுறுத்தல் லேபிளில்- யூரியாவுக்கு மாற்றாக நைட்ரஜன் யூரியாவை திரவத்தை பயன்படுத்தலாம் என்றும்
500 மில்லி திரவ உரபோத்தல் 45 கிலோ யூரியா பையின் திறன் கொண்டது என்றும் கூறுகிறது.நெல், சோளம், தேயிலை, காய்கறிகள், பழங்கள் மற்றும் பூ செடிகள் போன்ற அனைத்து பயிர்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
500 மில்லி போத்தல் திரவ உரத்தை 125 லிற்றர் தண்ணீரில் கரைத்து இலைகளில் தெளிக்க அறிவுறுத்தப்படுகிறது. இலங்கையில் இந்த நானோ நைட்ரஜன் திரவ உரத்தைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.