இவ்வருட இறுதிவரை கட்டுப்பாடுகள் தொடரும்..! சுகாதார அமைச்சு திட்டவட்டம்..
நாட்டில் தேவையற்ற நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக சில கட்டுப்பாடுகள் டிசம்பர் மாதம் வரையில் நீடிக்கவேண்டிய அவசியம் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்த்தன கூறியுள்ளார்.
வாரஇறுதியில் மக்கள் நடமாடிய விதத்தினை பார்த்தவேளை மக்கள் இனி ஆபத்தில்லை என்ற எண்ணத்தில் செயற்படுவது புலனாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
புதுவருடகாலத்தில் இதேநிலையைமை நாங்கள் பார்த்தோம் மக்கள் ஆலயங்களிற்கும் சுற்றுலாவிற்கும் செல்ல தொடங்கினார்கள் இதன் காரணமாக கொவிட் நிலைமையை ஆபத்தானதாக மாற்றினார்கள்.
கொரோனாவைரசினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பொதுமக்களை சுகாதார வழிகாட்டுதல்களை
பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர் சில கட்டுப்பாடுகளை டிசம்பர் வரை தொடரவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.