2 மாதங்கள் மட்டுமே தடையற்ற எரிபொருள் கிடைக்கும்..! கையை விரிக்கிறார் எரிசக்தி அமைச்சர்..
நாட்டில் அடுத்துவரும் இரு மாதங்களுக்கு மட்டுமே தடையில்லாமல் எரிபொருளை வழங்கலாம். அதற்கான உத்தரவாதத்தை மட்டுமே எங்களால் வழங்க முடியும். என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறியிருக்கின்றார்.
எனவே, எரிபொருள் விலை நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு அவர் நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் அடுத்த ஜனவரி வரை மட்டுமே தடையின்றி தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்றும் அவர் கூறினார் .
இறக்குமதிக்கான வரிச்சலுகை அல்லது விலை திருத்தம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுமாறு அவர் சுட்டிக்காட்டினார். IOC விலையை அதிகரித்தால், அது இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தபானத்தை பாதிக்கும்,
பின்னர் பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் விலை அதிகரிப்பால் நட்டம் அதிகரிக்கும் என்று அமைச்சர் கூறினார். இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தபானம் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் சுமார் 83 பில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்ததாகவும்,
ஆண்டின் இறுதியில் இழப்புகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 120 பில்லியன் ரூபாயை எட்டும் என்றும் அவர் கூறினார். இதேவேளை, மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை நீக்கப்படவுள்ளது. இதனால் மூலம், மாகாணங்களுக்கு இடையேயான
பேருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதனால் வியாழக்கிழமைக்குப் பிறகு நாட்டில் எரிபொருளுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.