பொதுமக்கள் அவதானம்..! கடற்கரைகள், மத வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் அரசின் தீவிர கண்காணிப்பில்..! பொலிஸ் புலனாய்வு பிரிவு களத்தில்.
வார இறுதியுடன் கூடிய விடுமுறையும் வருவதால் விடுமுறைக் காலத்தில் மாகாணங்களின் எல்லைகளை கடக்கவேண்டாம். என பொலிஸார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
அக்டோபர் 15 முதல் 21 வரையான காலப்பகுதியில் அத்தியாவசிய தேவை தவிர மாகாண எல்லைகளைக் கடந்து பயணிக்கும் வாகனங்களை அடையாளம் காண
பொலிஸ் புலனாய்வு பிரிவினரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அத்துடன், கடற்கரைகள், சுற்றுலாளத் தளங்கள்,
மத வழிபாட்டிடங்கள் போன்றவற்றில் விதிகளை மீற அதிகளவில் ஒன்றுகூடுவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொவிட் 19 கட்டுப்பாட்டு விதிகளை கண்டிப்பாக அமுல் செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.