மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை 21ம் திகதிவரை நீடிப்பு! 19ம், 20ம் திகதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த ஜனாதிபதி பொலிஸாருக்கு பணிப்பு..
நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத்தை எதிர்வரும் 21ம் திகதிவரை நீடிக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டிருக்கின்றது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
எதிர்வரும் 19ம் மற்றும் 20ம் திகதிகள் அரச விடுமுறை தினங்கள் என்பதன் காரணமாக மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடையை மிக இறுக்கமாக
கடைப்பிடிக்குமாறு பொலிஸாருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியிருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
இன்று முற்பகல் நிகழ்நிலை காணொளி ஊடாக இடம்பெற்ற கொவிட் செயலணி கூட்டத்தின் போதே ஜனாதிபதி மேற்படி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.