SuperTopAds

மகஸீன் சிறைச்சாலையில் தொற்று நீக்கி திரவத்தை குடித்த ஈரானிய கைதிகள்..! இருவர் பலி, 10 பேர் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
மகஸீன் சிறைச்சாலையில் தொற்று நீக்கி திரவத்தை குடித்த ஈரானிய கைதிகள்..! இருவர் பலி, 10 பேர் வைத்தியசாலையில்..

கொழும்பு - மகஸீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈரானிய சிறை கைதிகள் தற்கொலைக்கு முயன்ற நிலையில் இருவர் பலியானதுடன், மேலும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

சிறைச்சாலையில் தொற்று நீக்கித் திரவத்தைப் பருகிய சிறைக் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதாகச் சிறைச்சாலை பேச்சாளர் சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார். உயிரிழந்த கைதிகள் இருவரும் ஈரானிய பிரஜைகள் எனவும்,

மேற்படி தொற்று நீக்கித் திரவத்தைப் பருகிய ஈரானிய சிறைக்கைதிகளான மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இவர்கள் போதைப்பொருள் கடத்தல் 

தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.