பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்தவரை தாக்கி தொலைபேசிய திருடிய உப பொலிஸ் பரிசோதகருக்கு நடந்த கதி..!
பொலிஸ் புலானாய்வு பிரிவை சேர்ந்த ஒருவரை தாக்கிவிட்டு அவருடைய தொலைபேசியை திருடிச் சென்ற உப பொலிஸ் பரிசோதகர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தொியவருவதாவது,
கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேகந்த வீதி பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்தவரின் கைதொலைபேசியே குறித்த உப பொலிஸ் பரிசோதகரினால் திருடப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் குறித்த உப பொலிஸ் பரிசோதகர் ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக கொழும்பு மத்திய உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு தான் தகவல் வழங்கியதாகவும் அதுதொடர்பில் வாக்குமூலம் ஒன்றையும் வழங்கியிருந்தாகவும்
அதனால் ஆத்திரமடைந்தே உப பொலிஸ் பரிசோதகர் தன்னை அச்சுறுத்தியிருக்கலாம் எனவும் கொம்பனித்தெரு பொலிஸாரிடம் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்த நபர் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.