SuperTopAds

29 போின் வங்கி அட்டைகளின் இலக்கங்களை உருவி 3 நாட்களில் 114 முறை இணைய தளங்களில் பொருட்கள் வாங்கிய 23 வயது இளைஞன் கைது..! சினிமாவை மிஞ்சும் கதை..

ஆசிரியர் - Editor I
29 போின் வங்கி அட்டைகளின் இலக்கங்களை உருவி 3 நாட்களில் 114 முறை இணைய தளங்களில் பொருட்கள் வாங்கிய 23 வயது இளைஞன் கைது..! சினிமாவை மிஞ்சும் கதை..

29 பேருடைய வங்கி அட்டை இலக்கங்களை இணையம் ஊடாக திருடி பெருமளவு பணத்தை மோசடி செய்த 23 வயதான சந்தேகநபர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அரச வங்கியொன்றின் வங்கி அட்டை இலக்கங்கள் தொடர்பான பிரதான முகாமையாளரின் முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட தொடர் விசாரணைகளிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குருநாகல், தம்பொக்க பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவர் குற்றபுலனாய்வுப் திணைக்களத்தின் இணையக் குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்ஸ்டகிராம் செயலி குழுவின் உதவியுடன் 3 தினங்களில் 29 போின் வங்கி அட்டைகளில் 114 முறைகள் இணையத்தளத்தினூடாக பணம் செலுத்தி பொருள் கொள்வனவு செய்துள்ளனர்.

ஒரு நாளில் 8 இலட்சத்து 71 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ள சந்தேகநபர், இரவு வேளைகளில் நாடு பூராகவுமுள்ள வங்கி கணக்குகளுக்கு சூட்சுமமாக ஊடுருவி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவனரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பல்வேறு தொழில்நுட்ப இயந்திரங்களும் இவரிமிருந்து கைபற்றப்பட்டுள்ளன. குறித்த இன்ஸ்டகிராம் குழுவினூடாக, வெளிநாட்டு வங்கி கணக்குகளிலும் பணம் மோசடி செய்யப்படுவதாக 

விசாரணைகளில் தெரியவந்துள்ளதால், அந்த குழுவை இனங்காண்பதற்கான பரந்துப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் தற்போது குற்றபுலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.