இந்திய அமைதிப்படை காலத்தில் திருகோணமலையில் பணியாற்றிய அனுபவத்தை ஜனாதிபதியுடன் பகிர்ந்த இந்திய இராணுவ தளபதி..!
இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதேபோஸ் இந்திய ஆழும் பாரதிய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமிகளும் ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது இந்திய இராணுவ தளபதி இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில்
திருகோணமலை 4ம் மைல்கல் பிரதேசத்தில் தாம் பணியாற்றிய அனுபவத்தை ஜனாதிபதியுடன் பகிர்ந்து கொண்டிருப்பதுடன் அந்த நினைவுகள் தற்போதைய விஜயத்தின் மூலம்
புதுப்பிக்கப்பட்டிருப்பதாக இந்திய இராணுவ தளபதி கூறியுள்ளார்.