SuperTopAds

வியாபாரிகள் நினைத்த விலைக்கெல்லாம் சீனி விற்பனை செய்யப்படுகிறது..! நுகர்வோர் அதிகாரசபை கூறுகிறது..

ஆசிரியர் - Editor I
வியாபாரிகள் நினைத்த விலைக்கெல்லாம் சீனி விற்பனை செய்யப்படுகிறது..! நுகர்வோர் அதிகாரசபை கூறுகிறது..

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை மீறி சில வியாபாரிகள் சீனியை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அண்மையில் நுகர்வோர் அதிகார சபை வெள்ளைச் சீனிக்கு 125 ரூபாவும் பளுப்பு சீனிக்கு 128 ரூபாவும் சில்லறை விலையை நிர்ணயித்திருந்தது. எவ்வாறாயினும் குறித்த விலையை விட அதிக விலைக்குச் சீனியை விற்பனை செய்வதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சீனியை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை அரசாங்கம் அண்மையில் நீக்கியிருந்தாலும், கடன் பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் சீனியை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறக்குமதிப் பிரச்சினைகளால் சீனி கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக விற்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.