எரிமலை வெடிப்பால் ஒட்டுமொத்த மனிதகுலமும் அழியும்… விஞ்ஞானிகள் கணிப்பு !!
விரைவில் மாபெரும் எரிமலை வெடிப்பால் ஒட்டுமொத்த மனிதகுலமும் அழியும் அபாயமுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
Volcanic super-eruption எனப்படும் மாபெரும் எரிமலை வெடிப்பால் இந்த அபாயம் இருப்பதாகவும், ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட விரைவிலேயே இதுநிகழும் என்று தற்போது கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 45,000 – 7,14,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாபெரும் எரிமலை வெடிப்புகள் நிகழ்வதை விஞ்ஞானிகள் கணித்துள்ள நிலையில், அடுத்தமுறை நிகழும் என்று கணிக்கப்பட்ட எரிமலை வெடிப்பு கணிக்கப்பட்டதைவிட முன்னதாக நிகழும் என்பது தெரியவந்துள்ளது.
இந்தோனேசியாவின் டோபா எரிமலை 74,000 ஆண்டுகளுக்கு முன்பாக வெடித்ததே கடைசியாக உலகம் கண்ட Volcanic super-eruption. சமீபத்தில் மவுண்ட் அகுங்ஹ் எரிமலை சீற்றம் காரணமாக பாலி தீவில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
74,000 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 3,000 க்யூபிக் கிலேமீட்டர்கள் பாறை மற்றும் தூசிகளை காற்றில் தூக்கி வீசிய சுமத்ரா தீவின் டோபா எரிமலை, உலகின் ஒட்டுமொத்த தட்பவெப்ப நிலை மற்றும் சூழ்நிலையை பல நூற்றாண்டுகளுக்கு பாதித்தது.
The Earth and Planetary Science Letters அறிவியல் இதழில் பேராசிரியர் ரோஜர் பதிப்பித்துள்ள ஆய்வுக்கட்டுரையானது அடுத்து இதேபோன்ற பெரும் எரிமலை வெடிப்பு எப்போது நிகழும் என முன் அனுமானித்துள்ளது.
புவியியல் புள்ளி விவரங்களின் அடிப்படையில், இந்த நிகழ்வு 5,200 முதல் 48,000 ஆண்டுகளுக்கு இடையில் நிகழலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 17,000 ஆண்டுகள் என்பது இந்த காலக்கட்டத்தில் நிகழ்புள்ளியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பூமி தனக்குள் கொண்டுள்ள மாபெரும் அழுத்தத்தை அவ்வபோது எரிமலை வெடிப்பின் மூலம் வெளிக்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.