SuperTopAds

அடுத்த இரு மாதங்களில் மீண்டும் ஒரு கொரோனா அலை இலங்கையை தாக்கும்! அரச மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
அடுத்த இரு மாதங்களில் மீண்டும் ஒரு கொரோனா அலை இலங்கையை தாக்கும்! அரச மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை..

இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் மற்றொரு கொரோனா அலை தாக்கம் உருவாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர், வைத்தியர் கமல் பெரேரா கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்து விட்டது என நினைத்துச் செயற்பட்டால் இந்த நிலை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு, நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கொரோனா வைரஸ் தொற்றை மறந்து செயற்படுகின்றனர் எனவும் அவர் சாடியுள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடர்ந்து அமுலில் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.