தேர்தல் ஆணைக்குழு உறுப்பிரான பெறுப்பேற்கவுள்ளாரா வடமாகாண முன்னாள் ஆளுநர்...?
வடமாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடமாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜாவை ஜனாதிபதி நியமிக்க முடிவு செய்துள்ள நிலையில் ஏற்கெனவே தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக இருந்த
ஜீவன் தியாகராஜா அப்பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது பதவி விலகலை தொடர்ந்து வடமாகாண முன்னாள் ஆளுநராக இருந்த திருமதி சாள்ஸ்
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியை ஏற்பதற்கு சம்மதித்து உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.