தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசம் முயற்சித்தது! அதை மறுத்ததாலேயே இலங்கை மீது சர்வதேச அழுத்தம்..
இறுதிப்போரை நிறுத்தி தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை கொண்டுசெல்ல அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் முயற்சித்தன. ஆனால் அதனை இலங்கை மறுத்தமையே இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களுக்கு காரணமாகும்.
மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார். இவ்வாறு அரச தரப்பு எம்.பி. எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது அவர் மேலும் கூறியதாவதுஅமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இறுதிப் போர்க் காலத்தில் பிரபாகரனை அழைத்துச் செல்ல முயற்சித்தார்கள்.
போரை நிறுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் குடும்பத்தினரை அரசிடம் ஒப்படைத்துவிட்டு போரை நிறுத்த முயற்சித்தார்கள்.
ஆனால் சர்வதேசத்தின் எந்தவிதமான முயற்சிகளுக்கும் இலங்கை அரசு அனுமதிக்கவில்லை.தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரைக் காப்பாற்றும் சர்வதேசத்தின் முயற்சிகளைத் தோற்கடித்துவிட்டு இலங்கை இறுதிப் போரை வெற்றிகொண்டது.
இதனாலேயே அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கை மீது கோபத்தில் இருக்கின்றன. இதனாலேயே ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் செயற்படுகின்றனஎன்றார்.