SuperTopAds

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி திருமண நிகழ்வு! மணமகன், மணமகள், மற்றும் 10 சிறுவர்கள் உட்பட 100 பேர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி திருமண நிகழ்வு! மணமகன், மணமகள், மற்றும் 10 சிறுவர்கள் உட்பட 100 பேர் தனிமைப்படுத்தலில்..

தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வில் கூடியிருந்த சுமார் 100 பேர் சுகாதார பிரிவினால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் முந்தல் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 100 பேருக்குள் 10 குழந்தைகளும் உள்ளடங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. 

கொத்தன்தீவு வைத்தியசாலைக்கு அருகிலேயே இந்த திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்தாகவும் இதில் கலந்துகொண்ட எவரும் எவ்வித சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றியிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த திருமண நிகழ்வை சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைத்த போது பலர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.கடந்த வாரமும் குறித்த பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறி 

பல திருமண நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்தாகவும் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.