அதிரடியாக நீக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு விலைகள்! ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்பு..
பால்மா, கோதுமை மா, மற்றும் சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்கும் தீர்மானம் விசேட அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின்போது கட்டுப்பாட்டு விலைகளை அகற்றுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
குறித்த தகவலை அமைச்சர் லசந்த அழகியவண்ண கூறியிருக்கின்றார். மேலும் தேவையற்ற விலை அதிகரிப்பு நடவடிக்கைகளுக்கு இடமளிக்கவேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.