ரயில் சேவைகள் வழமைக்கு திரும்புகிறது! திகதியும் அறிவிக்கப்பட்டது..
நாட்டில் கொரோனா அபாயம் காரணமாக முடக்கப்பட்டிருந்த சகல ரயில் சேவைகளும் 15ம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுகாதார வழிகாட்டல்கள் விரைவில் வெளியிடப்பட்டால் தொடருந்து சேவைகளை மீள ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகத் தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தொடருந்து சேவைகளை மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.