நாடு முழுவதும் மின் தடை அமுலாகும் வாய்ப்பு! தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கவுள்ள மின்சாரசபை ஊழியர்கள்..
இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கவுள்ள நிலையில் மின்வெட்டு அமுலாகும் சாத்தியம் உள்ளதாக கூறப்படுகின்றது.
தேசிய சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் செயற்பாட்டினை எதிர்த்தே வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த
திட்டமிட்டு வருவதாக மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் இணைப்பாளரான ரஞ்ஜன் ஜயலால் தெரிவித்தார்.
கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் மின்சாரசபை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்களானால்,
மீண்டும் நாடு முழுவதும் மின்தடை ஏற்படும் ஆபத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.