அடுத்துவரும் 2 வாரங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும்..! சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..
நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இரு வாரங்களில் கொவிட் -19 தொற்றின் அடிப்படையில் எதிர்கால முடிவுகள் எட்டப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை தொடர்ந்து அமுலில் இருக்கும். இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் நிலைமை மதிப்பீடு செய்யப்படும், அதே நேரத்தில் பொருத்தமான முடிவு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை அடுத்த இரண்டு வாரங்களுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை முடிந்தவரை நிறுத்துமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். இதேவேளை 42 நாட்கள் நீடித்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம்
இன்று அதிகாலை தளர்த்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.