படிக்குமாறு கூறி துப்புத்தடியால் அடித்த தந்தை, 16 வயது மகன் உயிரிழந்த சோகம்..! தந்தை கைது..
தந்தை தும்புத்தடியால் அடித்தபோது மயக்கமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளான்.
சம்பவத்தையடுத்து தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காலி மஹமோதர பகுதியில் இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள
மகனை படிக்குமாறு கூறிய தந்தை தும்புத்தடியால் அடித்துள்ளார். இதன்போது 16 வயதான குறித்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்த நிலையில் கராப்பிட்டிய
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இதனையடுத்து தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் குறித்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றிருக்கின்றது.