சிகரெட் விலையை 25 ரூபாவால் அதிகரிக்க ஆலோசனை..! மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தகவல்..
அரசின் வருமானத்தை உயர்த்துவதற்காக 2022ம் ஆண்டிற்கான புதிய வரவுசெலவு திட்டத்தில் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க பலர் விரும்புவதாக கூறப்படுகின்றது.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. மேலும் சிகரட்டுக்கான விலை எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என
கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், அதற்கு 59.1 சதவீதமானோர் 25 ரூபாவுக்கும் மேலாக விலை அதிகரிக்க வேண்டும் என பதிலளித்துள்ளதாக கூறப்படுகின்றது.