SuperTopAds

இரு வாரங்களுக்கு பயணத்தடை நீடிக்கும்! அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இரு வாரங்களுக்கு பயணத்தடை நீடிக்கும்! அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு..

நாளை நாடு திறக்கப்பட்டாலும் அடுத்துவரும் 2 வாரங்களுக்கு மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். என அமைச்சர் திலும் அனுமுக கூறியுள்ளார். 

நிதியமைச்சருடனான விசேட சந்திப்பின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர்தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்குள் பேருந்து சேவை மாத்திரம் இடம்பெறும். புகையிரத சேவை இடம்பெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புகையிரதங்களில் போதிய ஆசன வசதிகள் இல்லாததன் காரணமாகவும் அனேகமானவர்கள் நின்று கொண்டே பயணம் செய்வதாலும் 

புகையிரத சேவையை ஆரம்பிக்கவேண்டாம் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. அதிகளவு பயணிகளை ஏற்றுவதை அனுமதிப்பதில்லை எனவும் 

தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பேருந்துகளில் பயணிகளில் நின்று கொண்டு பயணம் செய்வது அவதானிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

பொலிஸ்மா அதிபரை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.