கிறிஸ்த்தவ தேவாலயங்கள் மீண்டும் பயங்கரவாத தாக்குதலா? மறுக்கிறது பாதுகாப்பு அமைச்சு, தேவாலயத்திற்கு எச்சரிக்கை விடுத்த கடற்படையினர் யார்?
தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம். என பரவும் தகவல்கள் அடிப்படையற்றவை. என பாதுகாப்பு அமைச்சு விளக்கமளித்துள்ளது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஜெனரல் கமல் குணரத்ன இன்று கருத்து வெளியிடுகையில்,
இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில்
பரவி வரும் செய்தி பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டதோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டதோ அல்ல. எனவே இவ்விதமான அடிப்படையற்ற தகவல்கள் தொடர்பில்
பொது மக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றய தினம் வத்தளை போப்பிட்டி தேவாலயத்திற்கு சென்ற
கடற்படையினர் சிலர் அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் தேவாலயத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் எனவும்.
மதகுருக்கள் அணியும் உடையில் வருபவர்கள் தொடர்பாகவும் தேவாலயத்திற்கு வருபவர்கள் தொடர்பாகவும் அவதானமாக இருக்கும்படி கூறியதுடன்,
சுற்றாடலில் உள்ள தேவாலயங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்து சென்றதாக கொழும்பு மறைமாவட்டத்தில் சமூக மற்றும் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர்
அருட்தந்தை கிரிஷாந்த் ஊடகங்களுக்கு தகவல் வழங்கியதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள தேவாலயங்களுடன் தொடர்பு கொண்டபோது
அவ்வாறான கடற்படையினர் தமது ஆலயங்களுக்கு வரவில்லை என கூறியுள்ளதாகவும் தொிவித்திருக்கின்றார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் தமக்கு எதுவும் தொியாது என கடற்படை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.