SuperTopAds

தடுப்பூசி அட்டையை பரிசோதிக்கும் நடைமுறை அமுல்படுத்தியேனும் திருமண நிகழ்வுகளை நடாத்த அனுமதியுங்கள்! அரசிடம் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
தடுப்பூசி அட்டையை பரிசோதிக்கும் நடைமுறை அமுல்படுத்தியேனும் திருமண நிகழ்வுகளை நடாத்த அனுமதியுங்கள்! அரசிடம் கோரிக்கை..

நாட்டில் கொரோனா பரவல் அபாயம் காரணமாக திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் திருமண நிகழ்வுகளை நடாத்த அனுமதிக்குமாறு கொவிட் தடுப்பு செயலணியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

மேல் மாகாணத்தில் திருமண நிகழ்வுகளை ஒழுங்கமைப்போரின் சங்கம் மேற்படி கோரிக்கையை கொவிட் தடுப்பு செயலணியிடம் முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்து சங்கத்தின் தலைவர் சுமித் ரங்கன இந்த கோரிக்கையை முன்வைத்தார், 

தற்போதுள்ள நிலையில் சிறிய மக்கள் கூட்டத்துடன் திருமணங்களை நடத்த அனுமதி வழங்குமாறு கொவிட் குழுவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதே போல் திருமணத்திற்கு வருபவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்க வேண்டும். 

அவ்வாறான சட்டங்களை விதித்து திருமணங்களை நடத்த அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் திருமண நிகழ்வுகளில் மதுபானத்திற்கும் தடை விதிக்க வேண்டும்.விசேடமாக குடும்பத்தினர் மாத்திரம் 

இணைந்துக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு சங்கத்தின் தலைவர் சுமித் ரங்கன கேட்டுக்கொண்டுள்ளார்.