ஊரடங்கால் முடி திருத்தும் தொழிலை இழந்த இரு பிள்ளைகளின் தந்தை திருடனாகினார்..! 7 கோவில்களில் தொடர் திருட்டு..
கோவில் நகைகள் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தையான 39 வயதான சந்தேகநபர் முடி திருத்தும் தொழில் செய்துவந்த நிலையில் ஊரடங்கினால் தொழில் இழந்து வறுமையில் 7 கோவில்களில் திருடியதை ஒப்புக் கொண்டிருக்கின்றார்.
குறித்த சம்பவம் இரத்தினபுரியில் இடம்பெற்றிருக்கின்றது. மஹவலவத்த சிவன் கோவிலில் காளி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில்
கொரோனா தொற்றினால் தொழிலை இழந்த நிலையில் தொடர்ந்து 7 கோவில்களில் திருடியதாக சந்தேகநபர் ஒப்புக் கொண்டிருக்கின்றார். இதனையடுத்து சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார்.