SuperTopAds

மனித பாவனைக்கு உதவாத ரின் மீன்கள் சதோசா ஊடாக விற்பனைக்கு..! உணவு கட்டுப்பாட்டு சபை, தர நிர்ணய சபை ஆகியன அங்கீகாரம் வழங்கியுள்ளனவாம்..

ஆசிரியர் - Editor I
மனித பாவனைக்கு உதவாத ரின் மீன்கள் சதோசா ஊடாக விற்பனைக்கு..! உணவு கட்டுப்பாட்டு சபை, தர நிர்ணய சபை ஆகியன அங்கீகாரம் வழங்கியுள்ளனவாம்..

உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரசபை மற்றும் தர நிர்ணய நிறுவனம் ஆகியவற்றின் ஒப்புதலுடன் சதோசவுக்கு வழங்கப்பட்ட இலட்சக் கணக்கான ரின் மீன்கள் மனித நுகர்வுக்கு ஒவ்வாதவை என கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. 

இது குறித்த தகவல் சதொசவின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸால் ஓர் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ரின் மீன்கள் கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்துக்கு (சதொச) இலங்கை துறைமுக அதிகார சபையால் 

கடந்த ஜூன் 7 ஆம் திகதி ஒப்படைக் கப்பட்டன. முன்னதாக தனியார் இறக்குமதியாளரால் இறக்குமதி செய்யப்பட்ட குறித்த ரின்மீன்களை சதொச நிறுவனத் துக்கு ஏலமின்றி வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 

 225 ரூபா விலையுள்ள ரின்மீன் ஒன்று சதொசவுக்கு 325 ரூபாவுக்கு விற்கப்பட்டுள்ளது. பணம் செலுத்தாதது குறித்து இலங்கை துறைமுக அதிகார சபை பல சந்தர்ப்பங்களில் சதொசவுக்கு அறிவித்த போதிலும் இதுவரை பணம் வழங்கப்படவில்லை. 

சதொச நிறுவனத் தலைவர் இது குறித்துக் கூறுகையில், இந்த ரின் மீன்கள் நுகர்வுக்குப் பொருத்தமற்றவை என முறைப்பாடு வந்ததது. எனவே விற்பனை நிறுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட ரின் மீன்களுக்கு மட்டுமே 

துறைமுக அதிகார சபைக்கு உரிய தொகையைச் செலுத்துமாறு வர்த்தக அமைச்சால் அறிவிக்கப் பட்டுள்ளது என்றார்.