SuperTopAds

வாகன இறக்குமதிக்கான தடை நீங்கும் வாய்ப்பு..! மத்தியவங்கி ஆளுநர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
வாகன இறக்குமதிக்கான தடை நீங்கும் வாய்ப்பு..! மத்தியவங்கி ஆளுநர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு..

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குவது தொடர்பாக எதிர்வரும் டிசம்பர் மாதம் தீர்மானிக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார். 

வெளிநாட்டு இருப்பினை தொடர்ந்தும் பேணி வருவதன் காரணமாக எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நிலவும்.

அதேநேரம், வாகன இறக்குமதிகளின் கட்டுப்பாட்டைத் தொடர்ந்தும் நீடிப்பதற்கும் எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்தார்.

முழுமையாக அனுமதிப்பதால் பாரிய சிக்கல் நிலையினை எதிர்கொள்ள வேண்டியேற்படும். எனவே சில கட்டங்களின் ஊடாக 

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.